Saturday, November 3, 2012

அன்பு தோழி

உன் விழி பார்த்து கவிதை சொல்ல
நீ என் காதல் இல்லை


என் வழி பார்த்து நானும் செல்ல

நீ யாரோ என்று இல்லை


விதி பார்த்து நாம் சேர

இனி நீயும் நானும் வேறில்லை


நீ கண் கலங்கிட எதுவும்
நடவாமல் தவிர்ப்பேன்


மென்குரலில் நீயும் பேசிட எதையும்

பொறுமையில் சிறிதும் குறையாது கேட்பேன்

 
தலை சாய்த்து கொண்டு நீயும் நடக்க
உ(ன்னு)டனே வந்து விடுவேன் தோளும் தருவேன்


நீ கண் சிமிட்டி விடை பெரும் நேரம்

என் கரங்கள் நீட்டி வேண்டாம் என்பேன்


வாழ்கை அது பங்கு சந்தை போல

அதன் ஏற்றமும் இறக்கமும் நிலையில்லை


பிறந்து விட்டோம் சிலந்தி வலை போல 

மாட்டிகொண்டோம் தப்பிக்க வழியில்லை


துணை ஒன்று உன்னை போல
நான் எங்கும் கண்டதில்லை


நீடிக்க வேண்டும் இது போல
நடக்குமா சொல் தோழி…!

No comments:

Post a Comment